உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தீவை விட்டு புறப்படுகின்றது
உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி தீவை வந்தடைந்த, இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 09 மார்ச் 2026 தீவை விட்டு புறப்பட்டதுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
‘INS TARANGINI’ பயிற்சிக் கப்பல், 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதுடன், கிழக்கு கடற்படை கட்டளையில் நடைபெற்ற பயிற்சி அமர்வுகள் மற்றும் உத்தியோகபூர்வ கூட்டங்களுக்குப் பின்னர், 2026 மார்ச் 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை வீரர்களுக்கு ‘INS TARANGINI’ கப்பலில் நடத்தப்பட்ட பயிற்சி அமர்வுகள், கப்பலின் செயல்பாட்டுத் திறன்களைக் கண்காணித்தல் மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரியுடனான உத்தியோகபூர்வ சந்திப்புகளைத் தொடர்ந்து, கப்பல் 2026 மார்ச் 09, தீவை விட்டுப் புறப்பட்டது.
தீவில் கப்பல் தங்கியிருந்த காலத்தில், ‘INS TARANGINI’ குழுவினர் திருகோணமலை மற்றும் கொழும்பு பகுதிகளில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதில் பங்கேற்றதுடன், மேலும் இரு நாடுகளின் கடற்படை வீரர்களும் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்கள் மற்றும் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
மேலும், இதுபோன்ற உத்தியோகபூர்வ வருகைகள் மூலம் புதிய அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் வளரும் ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புதிய போக்குகள் மற்றும் சவால்களுக்கு கூட்டு அணுகுமுறையுடன் பதிலளிப்பதில் இலங்கை கடற்படைக்கு பெரிதும் உதவும்.


