உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை பங்கேற்பு
உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு “Healthy Weight – Wealthy Life.” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவைச் சுற்றிய பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி நடைபெற்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை கலந்து கொண்டது.
சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், இலங்கை ஊட்டச்சத்து மருத்துவர்களின் கல்லூரி (Sri Lanka College of Nutrition Physicians) ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கம் (Sri Lanka Medical Nutrition Association) ஏற்பாடு செய்த இந்த நடைபயணம், இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி (Sri Lanka College of Military Medicine) உள்ளிட்ட பல தொழில்முறை மருத்துவ நிறுவனங்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
சமநிலை உணவு பழக்கம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் நல்ல வாழ்க்கை முறையை கடைப்பிடித்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது குறித்து பொதுமக்களை விழிப்புணர்வு செய்யும் நோக்கமே இந்நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாகும்.







