ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் “JMSDF OONAMI” தீவை உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு தீவிலிருந்து புறப்படுகிறது

ஜப்பானிய கடற்படை தற்காப்புப் படையின் கப்பலான “JMSDF OONAMI” உத்த்யோகப்பூர்வ விஜயத்திற்காக 2026 மார்ச் 09 ஆம் திகதி தீவை வந்தடைந்ததுடன், உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு, சேவைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர், 2026 மார்ச் 11 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பிரியாவிடை அழித்தனர்.

தீவுக்கு வந்த “JMSDF OONAMI”என்ற கப்பலானது 150.5 மீட்டர் நீளமும் கொண்டுள்ளதுடன், இந்த உத்த்யோகப்பூர்வ விஜயத்தின் போது, மேற்கு கடற்படைத் தலைமையகத்தில், கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் IIO Hiromasa மற்றும் மேற்கு கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையே ஒரு உத்த்யோகப்பூர்வ சந்திப்பொன்றும் நடைபெற்றது.

மேலும், கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கொழும்புப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்கும் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கும் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்திலும் “JMSDF OONAMI” கப்பலின் குழுவினர் பங்கேற்றனர்.