கின்னஸ் உலக சாதனை படைப்பதற்காக, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே தனது ஓட்டத்தைத் தொடங்கினார்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு), (Manual Treadmill) இல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி கின்னஸ் உலக சாதனை (01) ஒன்றை படைப்பதற்காக, உலக சாதனை படைக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், இன்று (2026 மார்ச் 20) காலை 1000 மணிக்கு கொழும்பு கடற்படைத் தளத்தில் தனது ஓட்டத்தைத் தொடங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொ ட ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதன்படி, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே, (Manual Treadmill) இல் 12 மணி நேரம், 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேரக் காலப்பகுதியில் ஓடியதற்கான, இதற்கு முன் இருந்த அனைத்து கின்னஸ் உலக சாதனைகளையும் முறியடித்து, ஒரு புதிய கின்னஸ் உலக சாதனையை படைக்க எதிர்பார்க்கின்றார்.