Marines Field Training Exercise “Blue Whale – 2026” திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவினரால் நான்காவது (04) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட Blue Whale – 2026 பயிற்சி, கடற்படை காலாட்படைத் தளபதி, ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்கவின் தலைமையில் 2026 மார்ச் 20 அன்று தொடங்கியது. கிழக்குக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, 2026 மார்ச் 26 வெற்றிகரமாக நிறைவுபெற்றதுடன், இப்பயிற்சியின் இறுதி பயிற்சி, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவின் தலைமையில், திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விதுரவில் அமைந்துள்ள மரைன் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

வங்காளதேசம், இந்தோனேசியா மற்றும் மாலத்தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதினொரு (11) கடற்படை வீரர்கள் இந்த களப் பயிற்சியில் பங்கேற்கின்றனர், அதே நேரத்தில் இலங்கை கடற்படையிலிருந்து கடற்படை ஏவுதல் கட்டளை, கடற்படை காலாட்படை பிரிவு, கடற்படை மரைன் படைப்பிரிவு, சிறப்பு படகு படைப்பிரிவு, விரைவு தாக்குதல் படகு படைப்பிரிவு, ஆய்வு பணிப்படை மற்றும் கடற்படை சுழியோடி பிரிவு, இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த கடற்படை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் சக்தி தரையிறங்கும் கப்பல், கடலோரக் காவல் கப்பல்கள் மற்றும் RHIB படகுகளும் அத்துடன் இலங்கை விமானப்படையின் ஒரு (01) பெல் 412 ரக ஹெலிகாப்டரும் இந்த பயிற்சியில் பங்கேற்றது.

இந்தப்‘Blue Whale – 2026’ பயிற்சி நடவடிக்கையின் போது, (Amphibious Operations), (Reconnaissance), (Riverine/ Search and Clear Operations), (Amphibious Assault), (Naval Surface Fire Support - NSFS), (Air Infiltration by Rappelling), (Reinforcement and CASEVAC) , (Stability Operations) உள்ளிட்ட பல பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

இந்த Blue Whale - 2026 பயிற்சியின் மூலம், கடற்படையானது தரைவழியிலான நடவடிக்கைகள் குறித்த அறிவைப் புதுப்பிக்கவும், கடற்படைக்கும் விமானப்படைக்கும் பிராந்திய பங்குதாரர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வளர்க்கவும், போர்க்கால அனுபவங்களையும் புதிய அறிவையும் பரிமாறிக்கொள்ளவும், பங்குதாரர்களின் திறன்களைக் கண்டறியவும், கடல் பிராந்தியத்தில் உள்ள பொதுவான கடல்சார் சவால்களுக்குக் கூட்டாகப் பதிலளிக்கவும், அதன் மூலம் கடற்படையின் சிறப்புப் படைகள் மற்றும் பிரிவுகளின் திறன்களையும் செயல்பாட்டுத் தயார்நிலையையும் மேம்படுத்தவும் எதிர்பார்க்கிறது.

மேலும், ‘Blue Whale – 2026’ களப் பயிற்சியின் இறுதிப் பயிற்சியில், கடற்படை ஏவுதல் கட்டளையின் கொடி அதிகாரி உள்ளிட்ட கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கடற்படை மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட , கனிஷ்ட அதிகாரிகளும் சிரேஷ்ட, கனிஷ்ட மாலுமிகளும் கலந்து கொண்டனர்.