அவசர மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கரைக்கு அழைத்து வந்தனர்
சீனக் கொடி ஏற்றப்பட்ட வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து செயல்பட்ட ஒரு கடற்படைக் கப்பலால் 2026 மார்ச் 27 ஆம் திகதி கரைக்கு விரைவாக அழைத்து வரப்பட்டு, கப்பலின் உள்ளூர் பிரதிநிதி அலுவலகத்தின் உதவியுடன் சிகிச்சைக்காக காலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்கு அருகில் சுமார் 700 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த சீனக் கொடி ஏற்றப்பட்ட வெளிநாட்டுக் கப்பல் ஒன்றிடமிருந்து, அதன் பணியாளர் ஒருவருக்கு அவசர சிகிச்சைக்காக, கரைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. இதைத் தொடர்ந்து, கடற்படையானது நோயாளிக்கு தேவையான மருத்துவ அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், கப்பலில் இருந்து நோயாளியை வெளியேற்றி மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக (Medical Evacuation- MEDEVAC), தெற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த ஒரு கப்பல் காலி கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி, 2026 மார்ச் 27 ஆம் திகதி கடற்படையால் கரைக்குக் கொண்டுவரப்பட்ட நோயாளி, கப்பலின் உள்ளூர் பிரதிநிதி அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, மருத்துவ சிகிச்சைக்காக காலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திலும், அதனை ஒட்டிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலங்களிலும் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து கடற்படை தயார் நிலையில் உள்ளது.





