கடற்படையால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கல்நேவயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது
பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனுராதபுரம் நேகம சிறிசுமன வித்யாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 மார்ச் 27 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ உதவியுடனும், கம்மெத்த சமூக நலத் திட்டத்தின் நிதி ஆதரவுடனும் நிறுவப்பட்ட இந்த (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், கடற்படை இதுவரை 1152 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது.
அதன்படி, இவ்வாறு பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், அனுராதபுர மாவட்டத்தின் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனுராதபுர நேகம சிறிசுமன வித்தியாலயத்தில் பயிலும் பாடசாலை மாணவர்கள் உட்பட, அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.


