கடற்படை பொது மருத்துவமனையின் உள்நோயாளிகளின் நலனுக்காக கடற்படை சங்கத்தால் வழங்கிய நன்கொடை
இலங்கை கடற்படை சங்கம், 2026 ஏப்ரல் 07 ஆம் திகதியன்று, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, அத்தியாவசிய ஆடைத் தொகுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை மருத்துவமனை வளாகத்தில் நன்கொடையாக வழங்கியது.
அதன்படி, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, இலங்கை கடற்படை சங்கம் கடற்படைக்கு அத்தியாவசிய ஆடைத் தொகுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது, உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் அனைத்து கடற்படை வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், கடற்படை பொது மருத்துவமனையால் வழங்கப்படும் நோயாளியின் நலனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்.
மேலும், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மேற்கு கடற்படைக் கட்டளை தளபதி, தலைவர் உள்ளிட்ட கடற்படை சங்க உறுப்பினர்களும், கடற்படைப் வீரர்களும் கலந்து கொண்டனர்.


