இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகரான, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Nayyar Naseer, இன்று (2026 ஏப்ரல் 29) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

2026 ஏப்ரல் 20 அன்று இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Nayyar Naseer நியமிக்கப்பட்ட பின்னர், கடற்படைத் தளபதியுடனான முதல் உத்தியோகப்பூர்வ சந்திப்பு இதுவாகும். இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகருக்கு கடற்படைத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அப்போது, இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர் உயர்ஸ்தானிகரும் கடற்படைத் தளபதியும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு விடயங்கள் குறித்து இணக்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.