இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டு சுழியோடி பயிற்சி ‘IN-SLN DIVEX 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான ‘INS NIREEKSHAK’ 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்தது, மேலும் இலங்கை கடற்படை சுழியோடிகளும் கப்பலைச் சேர்ந்த மாலுமிகளும், 2026 ஏப்ரல் 21 முதல் 28 வரை கொழும்பு கடற்பகுதியில் சுழியோடி பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினர்.

‘Saturation Diving’ போன்ற நீண்ட நேர ஆழ்கடல் சுழியோடி செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் நவீன சுழியோடி தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்ட இந்தக் கப்பலின் குழுவினருடன் நடத்தப்பட்ட கூட்டு சுழியோடி பயிற்சியின் போது, ‘Nitrox’ வாயு கலவையைப் பயன்படுத்தி (Mixed Gas Diving) நுட்பங்கள் குறித்தும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், இந்தப் பயிற்சியானது, நவீன சுழியோடி உபகரணங்களைக் கையாளுதல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பாக இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே அறிவையும் அனுபவத்தையும் பரிமாறிக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பையும் வழங்கியது.