சமச்சீரற்ற போர் பயிற்சி வகுப்பு 2026 - திருகோணமலை, சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் ஆரம்பமானது

சமச்சீரற்ற போர்முறைப் பயிற்சி-2026 (ASYMMETRIC WARFARE COURSE-2026) 2026 மே 4 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் ஆரம்பமானது. சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கமாண்டர் லக்மல் வீரக்கொடி அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

சீன மக்கள் குடியரசு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இருபத்தி நான்கு (24) உறுப்பினர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்பதுடன். 10 வார காலத்திற்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில், சமச்சீரற்ற கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான பல கோட்பாட்டு மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள் அடங்கும்.

இந்தப் பயிற்சியை நடத்துவதன் மூலம், சிறப்பு நடவடிக்கைப் பயிற்சிகளுக்கான பிராந்திய மையமாக இலங்கை கடற்படையின் பங்கை மேலும் வலுப்படுத்துவதோடு, கடல்சார் பாதுகாப்பிற்கு உறுதிபூண்டுள்ள இணைநிலை நாடுகளுடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.