'தித்வா' புயலின் போது மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களைக் கடற்படைத் தளபதி பாராட்டினார்
‘தித்வா’ புயலின் போது தேசியப் பேரிடர் மேலாண்மை, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விழா, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில், 2026 மே 08 அன்று கடற்படைத் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.
2025 நவம்பர் 28 அன்று இலங்கையைப் பாதித்த சீரற்ற வானிலை மற்றும் 'தித்வா' புயலால் ஆபத்தில் இருந்த மக்களைத் தீவு முழுவதும் திறம்பட மீட்டு, பேரிடரால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாகச் சீரமைப்பதன் மூலம், தீவு முழுவதையும் உள்ளடக்கிய அனைத்து கடற்படைக் கட்டளைகளும் தங்களின் தேசியப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அதிகார வரம்பையும் தாண்டிச் செயல்பட்டன.
அதன்படி, கடற்படையானது ஆயிரத்து முந்நூற்று எழுபத்தெட்டு (1378) பேரினது உயிர்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பாக மீட்டதுடன், முப்பத்தொரு ஆயிரத்து நூற்றுத் தொண்ணூற்றாறு (31196) மக்களை ஆபத்தான இடங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி, அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றதுடன், மேலும் கடற்படையின் சுழியோடிகள், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் சுத்தமான குடிநீரை வழங்கி அத்தியாவசிய மனிதாபிமான நிவாரணப் பணிகளை மேற்கொண்டதுடன், வெள்ளப் பேரிடர் நிவாரணப் பணிகளின் கீழ் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பழுதடைந்த நீர் இறைப்பான்களைச் சரிசெய்து பராமரிப்பதற்காக மூழ்காளர் உதவியையும் வழங்கின. குறிப்பாக, மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில் மக்களைக் காப்பாற்றுவதற்காகக் கடற்படை தனது உயிரைத் தியாகம் செய்ததுடன், கலா ஓயா ஆற்றின் வெள்ள நீரில் சிக்கிய பேருந்தின் பயணிகளை மீட்க மேற்கொண்ட கடற்படை நடவடிக்கையும் சிறப்பாகப் பாராட்டப்பட்டது.
இந்த மனிதாபிமான பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு எல்லையற்ற அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் பங்களித்த கடற்படை வீரர்களுக்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி, எந்தவொரு சவாலான சூழ்நிலையையும் தொழில்முறைப் பெருமிதம், ஒழுக்கம் மற்றும் செயல்திறனுடன் எதிர்கொள்ள கடற்படை எப்போதும் தயாராக உள்ளது என்று கூறியதுடன், குழுப்பணி, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட்டதன் மூலம், கடினமான மற்றும் சவாலான சூழ்நிலைகளிலும்கூட கடற்படையால் தேசிய இலக்குகளை வெற்றிகரமாக அடைய முடிந்தது என்பதும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களுக்கான பாராட்டு விழாவின் முதல் கட்டம், கடற்படைத் தளபதியின் ஆதரவுடன் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இணையாக, கடற்படைப் வீரர்களைப் பாராட்டும் வகையில், கடற்படையின் மற்ற கட்டளைப் பிரிவுகளில் கட்டளைத் தளபதிகளின் ஆதரவுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.





