17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்களின் குழுவுடன் ‘INS SUNAYNA’ தீவிற்கு வந்தடைந்தது
நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன் இந்திய கடற்படையின் INS SUNAYNA’ கப்பல், 17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் புடைசூழ 'IOS Sagar’ என்ற பெயரில் தனது கடல் பயணத்தைத் தொடங்கி, 2026 மே 15 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி, கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையால் இக்கப்பல் வரவேற்கப்பட்டது.
மேலும், இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொரிஷஸ், மொசாம்பிக், மியன்மார், சிங்கப்பூர், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, திமோர் லெஸ்டே மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகளைக் கொண்டதேசிய குழுவுடன்2026 ஏப்ரல் 2 அன்று இந்தியாவின் மும்பை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘IOS Sagar’கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் SIDDHARTH CHAUDHARY கடமையாற்றுகின்றார்.
பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 'IOS Sagar’ கப்பலின் குழுவினர், தீவில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு தொழில்முறை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், மேலும் தீவில் உள்ள முக்கிய இடங்களைப் பார்வையிட பல பிராந்தியங்களுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.


