வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தீவிற்கு வந்தடைந்த இத்தாலிய கடற்படைக் கப்பலான "ITS GIOVANNI DELLE BANDE NERE", தீவிலிருந்து புறப்படுகிறது

இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, தனது வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 21 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்துடன், அத்தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இன்று (2026 மே 22) தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இலங்கை கடற்படையானது, கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் “ITS GIOVANNI DELLE BANDE NERE” கப்பலுக்கு கடற்படை வழியனுப்பு விழாவை நடத்தியது.

தீவுக்கு வந்தடைந்த 'ITS GIOVANNI DELLE BANDE NERE' என்ற கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் Antonio BUFIS, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் ஒரு அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது.