கடற்படையின் பங்கேற்புடன் கடல்சார் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டம்

2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் செயல்படுத்தப்பட்டு வரும் 'நீலப் பச்சை போரின்' (Green and Blue Domain) என்ற கடல்சார் சூழலமைப்பு பாதுகாப்புத் திட்டத்தின் “க்ளீன் லங்கா” (CLEAN SRI LANKA)ஒரு பகுதியாக, கடல் மற்றும் கடலோர மண்டலத்தில் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் மற்றொரு நிகழ்ச்சி, 2026 மே 19 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கடல் உயிரியலாளரும், சூழலியலாளரும், ஆமை பாதுகாப்பு திட்டத்தின் (Turtle Conservation Project) தலைவருமான துஷான் கபுருசிங்க வழங்கிய பங்களிப்புடன், ஆமைப் பாதுகாப்பு, சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுத்தல் மற்றும் கடலோரச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக இவ்நோக்கங்களுக்காகக் கையாளக்கூடிய நடைமுறை வழிமுறைகள் குறித்தும் கடற்படைப் பணியாளர்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டது.

மேலும், இந்தத் திட்டத்தில் பங்கேற்றவர்கள், கடற்படைத் தளத்தைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் இடங்களையும், நடைபெற்று வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டதோடு, சுற்றுச்சூழல் மறுவாழ்வுக்கான எதிர்கால நடவடிக்கைகளை அடையாளம் காணும் வகையில் சதுப்புநிலக் காடு வளர்ப்புக்கு ஏற்ற இடங்களையும் கண்டறிந்தனர்.

இவ்வாரான திட்டத்தின் மூலம் கடலோரச் சூழல் மண்டலங்களின் புனரமைப்பிற்கும் கடல்சார் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும் இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.