நிகழ்வு-செய்தி

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மூன்று சீன போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (Chinese People’s Liberation Army Navy) போர்க்கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்களும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் வருகை தந்த கப்பல்களை கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.

26 Aug 2024

இந்திய கடற்படையின் ‘INS Mumbai’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Mumbai’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

26 Aug 2024

ரியர் அட்மிரல் அனில் போவத்த கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் அனில் போவத்த தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஆகஸ்ட் 26) ஓய்வு பெற்றார்.

26 Aug 2024

கடற்படையினரின் பங்களிப்புடன் மஹமோதர மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று இன்று (2024 ஆகஸ்ட் 24) காலி மஹமோதர முதல் தடெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை நகர எல்லையுடன் இணைந்த கடற்கரையை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

24 Aug 2024

வெலிசர கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை திருமண வீடமைப்பு கட்டிடம் கடற்படை தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், வெலிசர கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை திருமண வீடுகள் கட்டிடம் இன்று (2024 ஆகஸ்ட் 23) கடற்படை வீரர்களின் பயன்பாட்டிற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

23 Aug 2024

கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2024 ஆகஸ்ட் 23) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

23 Aug 2024

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Stockdale’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது

2024 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி தனது விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Stockdale’ கப்பல், அதன் விநியோகம் மற்றும் சேவைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (2024 ஆகஸ்ட் 23) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

23 Aug 2024

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Stockdale என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Stockdale' என்ற கப்பல் இன்று (2024 ஆகஸ்ட் 22,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

22 Aug 2024

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS O'Kane' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது

2024 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி தனது விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS O'Kane' கப்பல், அதன் விநியோகம் மற்றும் சேவைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (2024 ஆகஸ்ட் 22) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

22 Aug 2024

கிழக்கு மாகாண தீயணைப்பு சேவைகள் 'முதல் திறன் பட்டை பரீட்சையின்' நடைமுறைத் தேர்வை நடத்துவதற்காக கடற்படையின் உதவி

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் இயங்கும் தீயணைப்பு சேவைகளின் 'முதல் திறன் பட்டை பரீட்சையின்' நடைமுறைத் தேர்வு 2024 ஆகஸ்ட் 20 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஆரம்பமானது, இதற்காக கடற்படை பொறியியல் திணைக்களத்தின் நிபுணத்துவ ஆதரவு வழங்கப்பட்டது.

21 Aug 2024