நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து 2025 ஜனவரி 25 இரவு மற்றும் இன்று காலை (2025 ஜனவரி 26) மன்னாருக்கு வடக்கே இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட (34) இந்திய மீனவர்கள், (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

26 Jan 2025

யாழ்ப்பாணத்தில் கடற்படை சிறப்பு நடமாடும் பல் மருத்துவ மனைகளை வெற்றிகரமாக நடபெற்றது

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஒழுங்கமைக்கப்பட்ட விசேட நடமாடும் பல் மருத்துவ மனைகள் 2025 ஜனவரி 21 முதல் 23 வரை யாழ்ப்பாணம் மாதகல் புனித அந்தோனியார் தேவாலயம், காங்கேசன்துறை நடேஸ்வ கல்லூரி மற்றும் வெத்திலகர்ணி பரமேஸ்வ கல்லூரியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

25 Jan 2025

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா பொறுப்பேற்றார்

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா இன்று (2025 ஜனவரி 24) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

24 Jan 2025

"க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு கடற்படையின் ஆதரவு

“வளமான நாடு - அழகான வாழ்வு” என்ற அரசாங்கத்தின் தூரநோக்கை நனவாக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், உயர் பருவ நெல் அறுவடையை சேமித்து வைப்பதற்காக அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமைந்துள்ள அரச நெல் களஞ்சியசாலைகளை கடற்படையினர் சுத்தப்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல், 2025 ஜனவரி 23 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

24 Jan 2025

ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க கடற்படை பொது பொறியியல் பணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்

ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக கடற்படையின் பொது பொறியியல் இயக்குனராக இன்று (2025 ஜனவரி 23) கடற்படை தலைமையகத்தின் பொது பொறியியல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

23 Jan 2025

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை இன்று (2025 ஜனவரி 22) சந்தித்தார்.

22 Jan 2025

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் எம்.ஆனந்த் (M Anand), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை இன்று (2025 ஜனவரி 22) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

22 Jan 2025

கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட 2025 ஜனவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், இலங்கை கடற்படைக் கப்பல்களான பண்டுகாபய மற்றும் ஷிக்க்ஷாவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை மீளாய்வு செய்தார். தம்மன்னா மற்றும் கஜபா ஆகிய கடற்படையின் பணியை மேற்பார்வையிட்டு, கடற்படையின் பணிகள் குறித்து அந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

13 Jan 2025

கடற்படை தளபதி ஜெயஸ்ரீ மஹா போ சமிது மற்றும் ருவன்வெளி மகா சே ரதுன் வழிபட்டபார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், 2025 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அனுராதபுரம் அட்டமஸ்தானம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குச் சென்று கடற்படையின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் இதற்கான கடற்படைச் சேவைகளுக்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டதுடன், இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களும் பங்குபற்றினார்

12 Jan 2025

நங்கூரம் கடற்படை நலன்புரி மையத்தில் போர்வீரர்களுக்காக நீர் சிகிச்சை தடாகம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டது

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பெளத்த சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தலைமையிலான குழு ஒன்று 2025 ஜனவரி 09 ஆம் திகதி வெலிசர “Anchorage” கடற்படை நலன் மையத்துக்கு விஜயம் செய்தது. அவர்கள், போரில் பாதிக்கபட்ட மற்றும் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்களின் நலனுக்காக நீர் சிகிச்சைக்கு ஏற்றதொரு தடாகம் கட்டுவதற்கான நிதி உதவியை வழங்கினர்

10 Jan 2025