நிகழ்வு-செய்தி
கடற்படையினருக்கு பணம் கொடுத்து தப்ப முயன்றவர்களை கைது செய்த கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு

திருகோணமலை புல்முடை ஜின்னபுரம் கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டை கைவிடுவதற்கு கடற்படையினருக்கு பணம் கொடுக்க வந்த இருவரை (02) கைது செய்த கடற்படை வீரர்களின் சேவையைப் பாராட்டி, இன்று (2022 ஒக்டோபர் 28,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.
28 Oct 2022
Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்ற ராயல் அவுஸ்திரேலிய கடற்படை போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் நடத்திய கடற்படை பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டு புறப்பட்டது

Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்பதற்காக 2022 அக்டோபர் 25, ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களான எச்.எம்.ஏ.எஸ் எடிலேட் (HMAS Adelaide) மற்றும் எச்.எம்.ஏ.எஸ் என்ஸாக் (HMAS ANZAC) ஆகிய கப்பல்கள் இலங்கை கடற்படை கப்பல் சயுரல மற்றும் சிந்துரலவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சிக்குப் பிறகு 2022 அக்டோபர் 26 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டது.
27 Oct 2022
Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்கும் 02 ராயல் அவுஸ்திரேலிய கடற்படை போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன

Indo-Pacific Endeavour 2022 பயிற்சியில் பங்கேற்கும் ராயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ் எடிலேட் (HMAS Adelaide) மற்றும் எச்.எம்.ஏ.எஸ் என்ஸாக் (HMAS ANZAC) ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று (2022 அக்டோபர் 25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன, வருகை தந்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
25 Oct 2022
P 627 என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இலங்கை நோக்கிச் செல்லும் வழியில் சிங்கப்பூரின் சாங்கி (Changi) துறைமுகத்தை வந்தடைந்தது

2022 செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கிய P627 ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல், 2022 அக்டோபர் 22 ஆம் திகதி காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்த நிகழ்வில் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி சசிகலா பிரேமவர்தனவும் கலந்து கொண்டார்.
23 Oct 2022
248 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 238 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 248 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 238 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 அக்டோபர் 22 ஆம் திகதி திருகோணமலை, சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
23 Oct 2022
‘Trinco Dialogue - 2022’ கடல்சார் மாநாடு வெற்றிகரமாக திருகோணமலையில் நடைபெற்றது

‘Trinco Dialogue - 2022’ கடல்சார் மாநாடு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்ணாகொட கேட்போர் கூடத்தில் 2022 ஒக்டோபர் 21 ஆம் திகதி கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
23 Oct 2022
ரியர் அட்மிரல் சுஜீவ செனவிரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சுஜீவ செனவிரத்ன இன்று (2022 ஒக்டோபர் 21) ஓய்வு பெற்றார்.
21 Oct 2022
இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்

இலங்கை கடற்படையின் ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம், பூனேவைஇலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கல்வி கட்டிடம் இன்று (2022 அக்டோபர் 07) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
07 Oct 2022
தெற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலையில் நிறுவப்பட்ட தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (High Dependency Unit- HDU) திறக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்பும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவு மற்றும் நன்கொடைகளுடன், காலி, பூஸ்ஸ தெற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலையில் நிறுவப்பட்ட தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (High Dependency Unit- HDU), கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில், 2022 அக்டோபர் 05 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
06 Oct 2022
கடற்படையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மொரயாய மஹா வித்தியாலயத்தில் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மொரயாய மஹா வித்தியாலயத்தில் வகுப்பறை கட்டிட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஒக்டோபர் 05) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
05 Oct 2022