நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முட்பட்ட 1285 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் 604 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு, குட்டிதூவ மற்றும் குடாபாடுவ கடற்கரைப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற ஆயிரத்து இருநூற்று எண்பத்தைந்து (1285) கிலோகிராம் பீடி இலைகள், அறுநூற்று நான்கு (604) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு கொள்கலன் (01) ஆகியவற்றை கடற்படையினரால் 2025 ஜூலை 29 ஆம் திகதி அன்று கைப்பற்றப்பட்டன.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதன்படி, நீர்கொழும்பு குட்டிதூவ கடற்கரைப் பகுதியில் மேற்கு கடற்படை கட்டளை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு (02) டிங்கி படகுகளில் இருந்து நாற்பது (40) சந்தேகத்திற்கிடமான பொருட்கள் சோதனை செய்யப்பட்டன. அங்கு கடற்படையினரால் மேற்கொள்ளபடும் நடவடிக்கையினால், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போது கடத்தல்காரர்களால் குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட 1285 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு டிங்கி படகுகளையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், நீர்கொழும்பில் உள்ள குடாபாடுவ கடற்கரைப் பகுதியில் அதே கட்டளையால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்கரைப் பகுதியில் பதினாறு (16) சந்தேகத்திற்கிடமான பைகள் மற்றும் ஒரு (01) பெட்டி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. கடற்படை நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கும் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 604 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 860 மருந்து குழாய்கள் அடங்கிய ஒரு பெட்டியை கடற்படை கைப்பற்றியது.
இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், இரண்டு டிங்கி படகுகள், உலர்ந்த இஞ்சி மற்றும் ஒரு தொகை மருந்துகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.