நடவடிக்கை செய்தி

புத்தளம் தடாகத்தில் இருந்து 04 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் புத்தளம் தடாகத்தில் பத்தலங்குண்டுவ தீவிற்கு அருகிலுள்ள கடலில் 2023 டிசம்பர் 08 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தல்காரர்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு (04) கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கம் அடங்கிய பார்சலொன்று கைது செய்யப்பட்டது. மெலும், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் (02) மற்றும் ஒரு டிங்கி படகும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

09 Dec 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 டிசம்பர் 07) நொரோச்சோலை, சேதபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் ஆயிரத்து இருநூற்று எண்பத்தாறு (1286) கிலோகிராம் பீடி இலைகளை கெப் வண்டியொன்றில் ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Dec 2023

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 06 ஆம் திகதி மாலை மன்னார் மற்றும் காங்கேசன்துறை கோவிலன் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் இருபத்தி ஒறு (21) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Dec 2023

கல்முனை கார்த்தீவ் கடற்கரையில் கரை ஒதுங்கிய சுறா மீனை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது

கல்முனை கார்த்தீவ் கடற்கரையில் சிக்கித் தவித்த சுறாவை (01) பத்திரமாக மீண்டும் ஆழ்கடலில் விடுவிக்க இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 05 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

06 Dec 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி கீரிமுந்தலம தடாகப் பகுதியில் இன்று (2023 டிசம்பர் 03,) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த தடாகப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் நானூற்று அறுபத்தைந்து (465) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

03 Dec 2023

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 நவம்பர் 29,) சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கடற்பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரெண்டு (12) பேருடன் நான்கு (04) டிங்கி படகுகள், ஆயிரத்து அறுநூற்று எழுபது கடல் அட்டைகள் (1670) மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

29 Nov 2023

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம், வெத்தலக்கேணி பகுதியில் கைது

யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி வத்திராயன் பகுதியில் 2023 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்படிருந்த முப்பத்து நான்கு (34) கிலோகிராம்களுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

28 Nov 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி, இப்பன்தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 2023 நவம்பர் 22 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்த நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

23 Nov 2023

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 09 பேர் கடற்படையினரால் கைது

மன்னார், அரிப்பு கடற்பரப்பில் 2023 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த ஒன்பது பேர் (09), மீன்பிடி உபகரணங்கள், ஆயிரத்து முன்னூற்று நான்கு கடல் அட்டைகள் (1384) மற்றும் மூன்று (03) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

21 Nov 2023

40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை யாழ்ப்பாணம் காரைநகர் கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், காரைநகர் சாம்பலோடை கடற்கரைப் பகுதியில் 2023 நவம்பர் 20 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடலோரப் பகுதியில் ஒரு முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்று ஒறு கிலோ கிராமுக்கு அதிகமான (101) எடையுள்ள (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

21 Nov 2023