விளையாட்டு செய்திகள்
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த்து

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டித்தொடர் 2025 மார்ச் 04 முதல் 07 ஆம் திகதி வரை வெலிசர இலங்கை கடற்படை நிறுவனத்தின் ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்றதுடன், ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையும் பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை பயிற்சி கடற்படை கட்டளையும் வென்றன.
08 Mar 2025
13வது பாதுகாப்பு சேவை Traithlon போட்டித்தொடரின் ஆண்கள் பிரிவில் கடற்படையிற்கு முதலாம் இடம்

13வது பாதுகாப்பு சேவைகள் Traithlon போட்டித்தொடர் - 2025 அனுராதபுரத்தில் உள்ள திசா ஏரிக்கு அருகில் 2025 மார்ச் 06 ஆம் திகதி இடம்பெற்றதுடன், இப் போட்டித்தொடரின் ஆண்கள் பிரிவில் சுழியோடி கடற்படைவீர்ரான ஜே.டி.பி.பி ஜயசிங்க முதலாம் இடத்தைப் பெற்றார்.
07 Mar 2025
"விமானப்படை சைக்கிள் சவாரி 2025" முதல் கட்டத்தின் வெற்றி கடற்படைக்கு

இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்து 26வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட "விமானப்படை சைக்கிள் சவாரி 2025" 2025 பெப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 02 வரை மூன்று (03) கட்டங்களில் நடைபெற்றதுடன், அங்கு வீரவிலவிலிருந்து இரத்தினபுரி வரையிலான முதலாவது கட்டத்தில் வெற்றியினை கடற்படையிற்கு கடற்படை வீரர் டி.ஏ.எஸ் பிரசங்க பெற்று தந்தார்
06 Mar 2025
'55வது சிரேஷ்ட தேசிய கெரம் சாம்பியன்ஷிப் 2025' மகளிர் சாம்பியன்ஷிப்பை பெண் மாலுமி ஜே ரொஷிடா வென்றார்

'55வது சிரேஷ்ட தேசிய கெரம் சாம்பியன்ஷிப் 2025', 2025 ஜனவரி மாதம் 18 முதல் மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை கொழும்பு கரம் சங்கத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை பெண் மாலுமி ஜே ரொஷிடா போட்டித் தொடரில் கடற்படைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப்பை வென்றார்.
04 Mar 2025
‘National Sailing Championship - 2025’ போட்டித்தொடர் காக்கை தீவில் வெற்றிகரமாக முடிவடைந்தது

‘National Sailing Championship - 2025’ போட்டித்தொடர் 2025 பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மட்டகுலியில் உள்ள காக்கை தீவில், போட்டித்தொடரானது வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அங்கு கடற்படை படகோட்டுதல் அணி அதன் ஒட்டுமொத்த பட்டத்தையும் வென்றது.
28 Feb 2025
கட்டளைகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டித்தொடர் - 2025 வெற்றிகரமாக முடிவடைந்தது

இலங்கை கடற்படைக்கு இடையேயான பூப்பந்து போட்டித்தொடரானது 2025 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை வெலிசறை, இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிறுவனத்தில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர ஞாபகார்த்த உள்ளக உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றதுடன், மேற்கு கடற்படைக் கட்டளை ஆண்கள் சம்பியன்ஷிப் மற்றும் பெண்களுக்கான பயிற்சித் தளபதி பட்டத்தை வென்றது.
21 Feb 2025
கடற்படை பெண்கள் கடற்கரை கைப்பந்து அணிகள் 2025 SUNQUICK தேசிய கடற்கரை கைப்பந்து போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது

2025 SUNQUICK தேசிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் 2025 31 ஜனவரி முதல் 2025 பெப்ரவரி 02, வரை நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை பெண்கள் வொலிபோல் "A" மற்றும் "B" அணிகள் சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டாம் இடத்தை வென்றன.
02 Feb 2025
கலாநிதி நிஹால் ஜனசேன ஞாபகார்த்த பாய்மரப் படகுப் போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள் கிடைத்தன

கலாநிதி நிஹால் ஜனசேன ஞாபகார்த்த கிண்ண பாய்மரப்போட்டி 2025 ஜனவரி 01 ஆம் திகதி வெலிகம, மிரிஸ்ஸ கப்பரதோட்டை கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், அங்கு கடற்படை படகோட்டம் பல வெற்றிகளைப் பெற்ற்றது.
01 Feb 2025
13வது பாதுகாப்பு சேவைகள் மேசை பந்து போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவின் அணி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2024 நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் மேசை பந்து போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவில் அணி சாம்பியன்ஷிப்பை கடற்படை வீரர்கள் வென்றனர்.
02 Dec 2024
‘Eagles Cup Handball Challenge Trophy 2024’ போட்டித்தொடரில் ஆண்களுக்கான இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Eagles Cup Handball Challenge Trophy 2024’, கைப்பந்தாட்டப் போட்டித்தொடர், 2024 நவம்பர் 17 முதல் 20 வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை வென்றது.
23 Nov 2024