11 கடற்படை வீரர்களின் உயிரைக் காப்பாற்ற உதவிய குடிமக்களுக்கு கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார்
2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி அங்குலானைக் கடல் பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான பி 4447 அதிவேக தாக்குதல் கண்காணிப்புப் படகு விபத்துக்குள்ளானதை அடுத்து, சீற்றமான கடல் நிலையையும் பொருட்படுத்தாது உடனடியாகச் செயற்பட்டு அதில் இருந்த பதினொரு (11) கடற்படை வீரர்களின் உயிர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு உதவிய அங்குலானைப் பகுதியைச் சேர்ந்த பதினான்கு (14) பொது மக்களின் பங்களிப்பைப் பாராட்டி, அவர்களுக்கான சான்றிதல்களை வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 18) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவினால் மேற்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும், இந்தத் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் தமது உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாது மேற்கொண்ட அந்தச் சிறப்புமிக்க தலையீட்டிற்கும் உயரிய மனிதநேயச் செயலிற்கும் இலங்கை கடற்படையின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்த கடற்படைத் தளபதி, கடற்படை வீரர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக அவர்கள் ஆற்றிய உன்னதமான குடி மக்களின் கடமையும் மனிதநேயத் தலையீடும், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி உலகிற்கும் ஒரு உயரிய முன்மாதிரியை வழங்கும் செயலாகும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார உள்ளிட்ட கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.













