EVENT NEWS 2026

2026 கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்ளை சாம்பியன் பட்டத்தை வென்றது

03 Aug 2026

2026 ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்ஷா’ நிறுவனத்தில் நடத்தப்பட்ட கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான அணிவகுப்புப் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வட மத்திய கடற்படை கட்டளை வென்றது.

ஆண்டுதோறும் கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டி போட்டித் தொடரை ஏற்பாடு செய்வதன் மூலம் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் நல்ல ஒழுக்கம், உயிர்வாழ்வு மற்றும் கட்டளைத் திறன்களை வளர்க்க கடற்படை நம்புகிறது.

13வது முறையாக நடத்தப்பட்ட கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான அணிவகுப்புப் போட்டியில், மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு, வட மத்திய, தென்கிழக்கு, வடமேற்கு, மிதப்பு மற்றும் பயிற்சிக் கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பது (09) அணிகளும், பெண் கடற்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு (01) அணி என்ற அடிப்படையில் பத்து (10) அணிகள் இதில் பங்கேற்றியது.

சிறந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடுடன் ஈர்க்கக்கூடிய அணிவகுப்புப் பாணியை வெளிப்படுத்திய வட மத்திய கடற்படை கட்டளை, 2026 ஆம் ஆண்டிற்கான கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான அணிவகுப்புப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இதன் இரண்டாமிடத்தை மேற்கு கடற்படை கட்டளை பெற்றதுடன், போட்டியின் சிறந்த கட்டளை அதிகாரிக்கான கோப்பையை வட மத்திய கடற்படை கட்டளையின் லெப்டினன்ட் கமாண்டர் குஷான் தென்னகோனும், சிறந்த அணிவகுப்பை வெளிப்படுத்திய கடற்படையினருக்கான கோப்பையை கடற்படை வீரன் டி.எம்.டி.டி. ராஜரத்னவும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா, இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தின் பயிற்சி நிர்வாகி கமாண்டர் கசுன் நுவரபக்ஷ உள்ளிட்ட கடற்படை அதிகாரிகளும், இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

Accessibility Tools