EVENT NEWS 2026

UNODC அதிகாரி கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்

18 Aug 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) திட்ட அலுவலகத்தின் பதில் தலைவரும், UNODC உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் (GMCP) கிழக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் திட்ட ஒருங்கிணைப்பாளருமான திருமதி Siji Song , இன்று (2026 ஆகஸ்ட் 18) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.

கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த திருமதி Siji Song அவர்களைக் கடற்படைத் தளபதி வரவேற்றதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பில் கடல் வழியூடான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய கடல்சார் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், இந்த உத்தியோகபூர்வமாகச் சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதிக்கும் திருமதி Siji Song அவர்களுக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Accessibility Tools