திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் 10 வது சமச்சீரற்ற போர்முறைப் பயிற்சி பாடநெறி - 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலை விசேட படகுகள் படைப்பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்ட 10 ஆவது சமச்சீரற்ற யுத்த உத்திகள் பற்றிய பயிற்சிப் பாடநெறியின் (10th Asymmetric Warfare Course - 2026) சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சின்னம் அணிவிக்கும் விழா, 2026 ஜூலை 10 ஆம் திகதி குறித்த தலைமையகத்தில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
10 வார கால அவகாசத்தைக் கொண்ட இந்த பயிற்சிப் பாடநெறியில் சீன மக்கள் குடியரசு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருபத்தைந்து (25) பயிற்சிப் பெறுநர்கள் கலந்துகொண்டதுடன், இப்பாடநெறியில் சமச்சீரற்ற கடல்சார் கடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல தத்துவார்த்த மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த 10 ஆவது சமச்சீரற்ற யுத்த உத்திகள் பற்றிய பயிற்சிப் பாடநெறியை - 2026 வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம், இலங்கை கடற்படையானது தனது செயல்பாட்டு நிபுணத்துவத்தை பிராந்திய நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளுதல், பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் புதிய சமச்சீரற்ற கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக்கூடிய விசேட செயல்பாட்டுத் திறனைக் கொண்ட கடற்படை ஆளுமைகளை உருவாக்குவதற்கான தனது அர்ப்பணிப்பையும் திறனையும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் Captain Anand Mukundan, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் விசேட படகுகள் படைப்பிரிவு தலைமையகத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.













