EVENT NEWS 2026

கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தார்

27 Jul 2026

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை 27) வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இதற்கமைய, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படையின் 27வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் கடற்படை தளபதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், கடற்படை தளபதியினால் கௌரவ அமைச்சருக்கு நினைவுப்பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

Accessibility Tools