கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அம்பாறையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பானம வடக்கு தீகமண்டல ஆரம்பப் பாடசாலையில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம், 2026 ஜூலை 10 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பங்களிப்புடனும், சிரச ஊடகக் வலையமைப்பின் "கம்மெத்த" சமூக சேவைத் திட்டத்தின் கீழ், கோஹுவலையைச் சேர்ந்த திருமதி பனர்டீன் த சில்வாவின் நிதிப் பங்களிப்புடனும் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து, கடற்படையினரால் இதுவரை 1158 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், லாகுகல பிரதேச செயலகப் பிரிவின் பானம வடக்கு தீகமண்டல ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அப்பகுதியில் வாழும் பெருமளவிலான மக்களின் தூய்மையான குடிநீர் தேவை இலகுவாக பூர்த்தி செய்யப்படும்.
மேலும், தூய்மையான குடிநீரை வழங்குவதற்கான இந்த சமூக சேவைத் திட்டத்திற்கு இலங்கை கடற்படை தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கும்.













