EVENT NEWS 2026

கடற்படையினரால் இரத்ததான முகாம் ஏற்பாடு

04 Jul 2026

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக சேவை நடவடிக்கையாக, இரத்ததான முகாம் ஒன்று 2026 ஜூன் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, கடற்படை தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரிலும், கிழக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையிலும் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை ஆகியவற்றின் இரத்த வங்கிகளுடன் ஒருங்கிணைந்து இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த உன்னதமான சமூக சேவை நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படையினர் பலர் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.

Accessibility Tools