டெங்கு ஒழிப்பு தேசிய நடவடிக்கைக்கு இலங்கை கடற்படையின் பங்களிப்பு
"டெங்கு இல்லா கொழும்பை நோக்கி” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து தனது செயற்பாட்டு பங்களிப்பை வழங்கி வருகிறது. இம்மாபெரும் தேசிய முயற்சி, ‘Clean Sri Lanka’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
2026 ஜூலை 14 ஆம் திகதி, தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் பத்தாவது (10) நாள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன், சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட இலங்கை கடற்படையின் அறுபத்தொன்று (61) பணியாளர்கள் இந்நாட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த தங்களது பங்களிப்பை வழங்கியதுடன். அதன்படி பொரளை, வத்தளை, கோட்டை, நாரஹேன்பிட்டி, மோதர, மஹர, பாணந்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் மொத்தம் ஆயிரத்து எண்ணூற்று முப்பத்திரண்டு (1,832) இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் ஐம்பத்து நான்கு (54) இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையுடன் இணைந்த வகையில், சுற்றுப்புறச் சூழலை முறையாக ஆய்வு செய்து, டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளும் இலங்கை கடற்படையின் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













