தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இலங்கை கடற்படை தனது தீவிர பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இத்தேசியத் திட்டம் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய திட்டமானது, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதையும் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 ஜூலை 20 ஆம் திகதியன்று இந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் பதினைந்தாவது (15)நாள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்டுள்ள தொண்ணூரு (90) கடற்படை வீரர்கள் இந்த தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்காகத் தமது பங்களிப்பை வழங்கினர். அதன்படி, மோதறை, மட்டக்குலி, பொரளை, நாரஹேன்பிட்ட, களனி, மஹர, வத்தளை, கம்பஹா, ராகம மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் மூவாயிரத்து நானூற்று எழுபது (3,470) இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அறுபத்து மூன்று (63) இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்த தேசிய டெங்கு ஒழிப்புப் பிரச்சாரத்திற்கு இணையாக, டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் கண்டறிவதற்காக அனைத்து கடற்படைத் தளங்களிலும் முறையான சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதனைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் மற்றும் அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.













