EVENT NEWS 2026

தெற்கு கடற்படைப் கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா கடமைகளைப் பொறுப்பேற்றார்

30 Jul 2026

தெற்கு கடற்படைப் கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா, இன்று (2026 ஜூலை 30) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

பாரம்பரிய கடற்படை மரபுகளுக்கு அமைவாக புதிய தளபதி தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பிராந்தியத்தின் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன கட்டளை தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகப் பொறுப்புகளைக் கையளித்தார்.

Accessibility Tools