EVENT NEWS 2026

கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக வடக்கு கடற்படை கட்டளையில் இரண்டு ஓய்வு விடுதிகள் திறப்பு

22 Jul 2026

இலங்கை கடற்படையினரின் நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், வடக்கு கடற்படை கட்டளையில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு (02) கடற்படை ஓய்வு விடுதிகளை திறக்கும் நிகழ்வு, துணைத் தலைமை அதிகாரியும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் 2026 ஜூலை 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

இதன்படி, இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ நிறுவனத்தினால் கடற்படைப் பிரிவு சக்கியாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கனிஷ்ட கடற்படை வீரர்களின் ஓய்வு விடுதி 2026 ஜூலை 20 அன்று திறந்து வைக்கப்பட்டதுடன், வெற்றிளைக்கேணி கடற்படைத் தளத்திற்குச் சொந்தமான பரந்தன் கடற்படைப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை ஓய்வு விடுதி 2026 ஜூலை 21 அன்று திறந்து வைக்கப்பட்டது.

கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக இந்த புதிய ஓய்வு விடுதிகள் இரண்டும் அமைத்தல் குறிப்பிடக்கத்தக்கது. இந்த வசதிகளின் மூலம் கடற்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகவும் வசதியான மற்றும் தரமான ஓய்வு விடுதி வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி, இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ மற்றும் வெற்றிளைக்கேணி கடற்படைத் தளம் ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் உட்பட கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Accessibility Tools