உயிர்கொல்லி டெங்கு அபாயத்தை ஒழிப்பதற்கான தேசிய நடவடிக்கைக்கு கடற்படை பங்களிப்பு
இலங்கை கடற்படையானது, தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக “க்ளீன் ஶ்ரீ லங்கா” செயளகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு ஆகியோருடன் இணைந்து, 2026 ஜூலை 05 முதல் 12 ஆம் திகதி வரை டெங்குவை ஒழிப்பதற்கான விரிவான வேலைத்திட்டங்ள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
(Towards a Dengue-Free Colombo) என்ற தொனிப்பொருளின் கீழ், சுகாதார மருத்துவ அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் (PHI) இணைந்து, மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர். இதன் கீழ், இன்றைய தினம் (2026 ஜூலை 06) நாரஹேன்பிட்ட, மஹர, வத்தளை, மட்டக்குளி, பொரளை, எத்துல்கோட்டை மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் எழுபத்தி மூன்று (73) இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்தொன்று (1,651) இடங்கள் கண்டறியப்பட்டன. இந்த விரிவான டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த இருநூற்று இருபத்தெட்டு (228) விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக, கடற்படையின் ஏனைய கட்டளைகளினாலும் பல டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது, சுற்றாடல் தொகுதிகள் தீவிரமாகப் பரிசோதனை செய்யப்பட்டு, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்படை முகாம்களை டெங்கு நுளம்புகள் அற்ற வலயங்களாக மாற்றும் நோக்கில், கடற்படை முகாம் வளாகங்களுக்குள்ளும் பல டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2026 ஜூலை 06 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்













