வெலிசறை கடற்படை வளாகத்தில் கடற்படையின் கனிஷ்ட மாலுமிகளுக்கான குடியிருப்பு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன
கடற்படையின் கனிஷ்ட மாலுமிகளுக்கான குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வெலிசறை கடற்படை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு (02) கட்டளை அதிகாரிகள் இல்லங்களின் திறப்பு விழா, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையிலும், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் ஜகத் குமார அவர்களின் ஆதரவில், 2026 ஜூன் 17 ஆம் திகதி நடைபெற்றது.
அதன்படி, கடற்படையின் குடிமுறைப் பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல் பிரிவுகளின் தொழில்நுட்ப, உழைப்பு மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகளுடன் புதிதாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களைத் திறந்து வைத்த பின்னர், கடற்படைத் தளபதி, இதற்கு அர்ப்பணிப்புடன் பங்களித்த அனைத்து கடற்படை வீரர்களையும் பாராட்டினார்.
மேலும், கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படைப் பணியாளர்கள் குழுவினர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.













