EVENT NEWS 2026

கடற்படை தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

18 Jun 2026

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பனாகொட, 2026 ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரு தினங்களில் தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது, குறித்த கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, நலன்புரி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அவதானித்ததுடன், அந்தப் பணிகளை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் மேற்கொள்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், கடற்படையின் கடமைகள் மற்றும் செயல்பாட்டு நோக்கம் தொடர்பில் அந்த கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினருக்கு தெளிவுபடுத்தினார்.

அதற்கமைய, தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்த கடற்படை தளபதிக்கு, குறித்த கட்டளையின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க வரவேற்பளித்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் வைத்து தென்கிழக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான கடற்படையினரை உரையாற்றிய கடற்படை தளபதி, கடற்படையின் கடமைகள் மற்றும் செயல்பாட்டு நோக்கம் தொடர்பில் அந்த கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினருக்கு தெளிவுபடுத்தினார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடற்படை தளபதி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களின் உதவி மீன்பிடிப் பணிப்பாளர்களைச் சந்தித்து, தென்கிழக்கு கடல் பிராந்தியத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்தல், மீன் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சட்டபூர்வமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களைப் பாதுகாப்பதற்காக கடற்படையினரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

Accessibility Tools