EVENT NEWS 2026

அமைதிக்காப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை மருத்துவக் குழுவிற்கு சர்வதேச அமைதிக்காப்பாளர் தினத்தில் சிறப்பு பாராட்டு

08 Jun 2026

2026 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி தென் சூடானின் போர் (Bor) நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைதிக்காப்பாளர் தினக் கொண்டாட்ட நிகழ்வில், இலங்கை கடற்படையின் சத்திரசிகிச்சை நிபுணர் கெப்டன் லசந்த உல்லுவிஸ்ஹேவா மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் கெப்டன் சமிந்த அமரசேகர ஆகிய சிரேஷ்ட சிறப்பு மருத்துவ அதிகாரிகள் இருவரும் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி, அவர்களுக்கு பாராட்டுக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

தென் சூடானின் ஜொங்க்லேய் (Jonglei) மாநில ஆளுநர் டாக்டர் Riek Gai Kok Diang அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென் சூடான் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தென் சூடானிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு பணிக்குழுவின் (UNMISS) தலைவரும் கலந்து கொண்டனர். இதன்போது, தென் சூடான் மக்களின் சுகாதாரம் மற்றும் நலனுக்காக இலங்கை கடற்படை மருத்துவ அதிகாரிகள் வெளிப்படுத்திய தொழில்முறை சிறப்புத் திறனும் அர்ப்பணிப்பும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

மேலும், இந்த கௌரவிப்பு, சர்வதேச அமைதிக்காப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை வழங்கி வரும் சிறப்பான பங்களிப்பையும், மனிதாபிமான பணிகளுக்காக இலங்கை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

Accessibility Tools