இலங்கை விமானப்படையின் விமானப் பணிக்குழு உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட இரண்டாவது நீரில் உயிர்வாழ்தல் பயிற்சிப் பாடநெறி, சிறப்புப் படகுப் படையணிப் பயிற்சிப் பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவு
திருகோணமலை சிறப்புப் படகுப் படையணிப் பயிற்சிப் பாடசாலையில், 2026 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப்படையின் விமானப் பணிக்குழு உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட இரண்டாவது நீரில் உயிர்வாழ்தல் பயிற்சிப் பாடநெறி (Water Survival Training Course), 2026 நவம்பர் 05ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன்போது, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள், சிறப்புப் படகுப் படையணிப் பயிற்சிப் பாடசாலையின் பயிற்சி நிறைவேற்று அதிகாரி கொமாண்டர் திஸ்ஸ குமார தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
அதன்படி, கடல்சார் சூழல்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தேவையான இலங்கை விமானப்படையின் விமானப் பணிக்குழு உறுப்பினர்களின் நீரில் உயிர்வாழும் திறன்களையும் தயார் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இப்பயிற்சிப் பாடநெறியில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த ஐந்து (05) அதிகாரிகள் மற்றும் பதினைந்து (15) இதர தரத்தினர் உள்ளிட்ட மொத்தம் இருபது (20) உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நீரில் நீந்துதல், நீரில் மிதக்கும் உத்திமுறைகள், நீருக்கடியில் இருந்து தப்பிக்கும் உத்திமுறைகள், கடலில் உயிர்வாழும் முறைகள், அவசர அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி வழங்குதல் மற்றும் மீட்பு நடவடிக்கை உத்திமுறைகள் தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கிய இப்பயிற்சிப் பாடநெறியின் இறுதிப் பயிற்சியானது, திருகோணமலை துறைமுகத்தினுள் அமைந்துள்ள தீவுப் பகுதியில் 18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.
மேலும், இப்பயிற்சித் திட்டத்தின் ஊடாக இலங்கை கடற்படைக்கும் இலங்கை விமானப்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பும், கூட்டுச் செயற்பாட்டுத் திறன்களும் மேலும் வலுப்பெறுவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும்.













