களுத்துறை ஹீனட்டியன்கல சிறி சீவலி மகா வித்தியாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கடற்படையின் சமூக நலன்புரிப் பங்களிப்பு
“க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக முன்னெடுக்கப்படும் பாடசாலை வளாகங்களைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து புனரமைத்தல் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக நலன்புரிப் பங்களிப்புடன், களுத்துறை மாவட்டத்திலுள்ள ஹீனட்டியன்கல சிறி சீவலி மகா வித்தியாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு, இன்று (2026 நவம்பர் 02) மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டன.
“க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான பங்காளர்களில் ஒன்றாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு இணையாக பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை வளாகங்களைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய பணிகள், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், முப்படையினரின் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி, இலங்கை கடற்படையினால், களுத்துறை ஹீனட்டியன்கல சிறி சீவலி மகா வித்தியாலய வளாகத்தில் பிரதான நுழைவாயிலை நிர்மாணித்து பொருத்துதல், பாதுகாப்பு மதில் அமைத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அலுமாரிகளை புனரமைத்தல் ஆகிய பணிகள் 2026 செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. மேற்குறித்த உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள், மேற்கு கடற்படை கட்டளையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பங்களிப்புடன் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்காக இவ்வாறு 2026 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி கையளிக்கப்பட்டன.













