EVENT NEWS › 2026

சட்டத்தின் ஆட்சி தொடர்பான கருத்தரங்கு காலியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

30 Oct 2026

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (United States Defense Security Cooperation Agency - DSCA) மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகம் (Defense Security Cooperation University - DSCU) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சட்டத்தின் ஆட்சி தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கு, 2026 ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் காலி, கிந்தோட்டையில் அமைந்துள்ள Radisson Blu Resort ஹோட்டல் வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதன் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2026 ஒக்டோபர் 28 ஆம் திகதி இடம்பெற்றது.

தொழில்சார் பொறுப்புகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நிறைவேற்றுவதில் சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் குறித்த புரிதலை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இச்செயலமர்வில், கடற்படைப் பணியாளர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல், சட்டம் தொடர்பான விழிப்புணர்வை விரிவுபடுத்துதல் மற்றும் கடற்படை நடவடிக்கைகளின்போது சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது தொடர்பான அறிவை மேம்படுத்தி, இற்றைப்படுத்துதல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதன்படி, மூன்று (03) நாட்கள் நடைபெற்ற இச்செயலமர்வில், தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா உள்ளிட்ட அக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு (07) அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், இம் மூன்று நாள் கருத்தரங்கில் பங்கேற்ற அதிகாரிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில், அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அமெரிக்கக் கடற்படையின் லெப்டினன்ட் Jamie Bishop மற்றும் லெப்டினன்ட் Summer Combs, அமெரிக்கத் இராணுவப் படையின் கெப்டன் Armando Santiago மற்றும் அமெரிக்க மரைன் படையின் கெப்டன் Stephen Sakowicz ஆகிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Accessibility Tools