உலக ‘மார்பகப் புற்றுநோய்’ விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று
உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கிழக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட பெண் கடற்படைப் பணியாளர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று, கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்களின் வளவாளர் பங்களிப்புடன், 2026 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத் தளத்தின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல், உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் நோயைத் தடுப்பதற்காகப் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கான வளவாளர் பங்களிப்பை, கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவமனையின் உளவியல் ஆலோசனை அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் சமிலா விதானகே மற்றும் சத்திரசிகிச்சை மருத்துவ அதிகாரியான லெப்டினன்ட் தவிஷ்யா டி சில்வா ஆகியோர் வழங்கினர்.
மேலும், பெண் கடற்படைப் பணியாளர்கள் மத்தியில் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துதல், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை ஊக்குவித்தல் மற்றும் மார்பக ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவற்றில் கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெருமளவிலான பெண் அதிகாரிகளும் பெண் கடற்படையினரும் கலந்துகொண்டனர்.













