புதிய பதில் கொமடோர் சுகாதார அதிகாரியாக (மேற்கு) வைத்தியர் கெப்டன் அனுருத்த ஹேரத் பொறுப்பேற்பு
இலங்கை கடற்படையின் புதிய பதில் கடமையாற்றும் கொமடோர் சுகாதார அதிகாரியாக (மேற்கு), வைத்தியர் கெப்டன் அனுருத்த ஹேரத், இன்று (2026 ஒக்டோபர் 12) கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதற்கமைய, கொமடோர் சுகாதார அதிகாரி (மேற்கு) பதவியில் பணியாற்றிய வைத்தியர் கொமடோர் தர்மப்பிரிய சந்திரகுப்த, கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் வைத்து வைத்தியர் கெப்டன் அனுருத்த ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாகக் கடமைகளை ஒப்படைத்தார்.
2001 ஆம் ஆண்டு நேரடி ஆட்சேர்ப்பு அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து, 2001 செப்டெம்பர் 17 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட வைத்தியர் கெப்டன் அனுருத்த ஹேரத், பதில் கொமடோர் சுகாதார அதிகாரி (மேற்கு) பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் கெப்டன் கடற்படை மருத்துவ நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.













