புதிய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் கொமடோர் சிந்தக விஜேதாச கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் புதிய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் கொமடோர் சிந்தக விஜேதாச, இன்று (2026 ஒக்டோபர் 16) கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
அதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய வைத்தியர் ரியர் அட்மிரல் ஜனக மாரபே, கடற்படைத் தலைமையகத்தில் வைத்தியர் கொமடோர் சிந்தக விஜேதாசவிடம் உத்தியோகபூர்வமாகப் பதவிக்கான கடமைகளை ஒப்படைத்தார்.
1995 ஆம் ஆண்டு நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் இலங்கை கடற்படையில் இணைந்து, 1995 மார்ச் 02 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட வைத்தியர் கொமடோர் சிந்தக விஜேதாச, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் விசேட எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார்.
1 /
6













