உலக மனநல தினத்தை முன்னிட்டு கடற்படைப் வீரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று
ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படும் உலக மனநல தினத்தை முன்னிட்டு, ‘Art & Aroma for Wellbeing’ எனும் தொனிப்பொருளின் கீழ், கடற்படை வீரர்களின் மனநலத்தை மேம்படுத்துதல் மற்றும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று, 2026 ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் நிபுண நிறுவனத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதற்கமைய, தெற்கு கடற்படை கட்டளையின் உளவியல் ஆலோசனையாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம், கடற்படைப் வீரர்களின் மனநலத்தை மேம்படுத்துதல், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் ஊடாகத் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியன நோக்கங்களாகக் கொண்டிருந்தன.
சுவாசப் பயிற்சிகள், ஓவியம் மற்றும் கலைப் படைப்புகள் சார்ந்த செயற்பாடுகளில், பங்கேற்ற கடற்படை வீரர்களுக்கு தமது உணர்வுகளை அடையாளம் காணவும், படைப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ளவும், சிறந்த மனநலத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும், கலைப் படைப்புகளின் திறன் அல்லது அழகியல் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, நிறங்கள் மற்றும் கலைப் படைப்புகள் ஊடாகத் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கடற்படை வீரர்களின் மனநலத்தை வலுப்படுத்துதல், ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குதல் மற்றும் மனநலம் தொடர்பான திறந்தநிலை மற்றும் நேர்மறையான மனப்பாங்குகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை இலங்கை கடற்படை எதிர்பார்க்கின்றது.













