உயிர்த் தியாகம் செய்த கடற்படை வீரர்களை நினைவுகூரும் வகையில் பௌத்த மத நிகழ்வு திகம்பத்தனையில் நடைபெற்றது
2006 ஆம் ஆண்டு ஹபரணை, திகம்பத்தனை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது தாய்நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த இலங்கை கடற்படை வீரர்களை நினைவுகூர்ந்து, அந்த வீரமிக்க கடற்படைப் வீரர்களுக்குப் புண்ணியத்தை அர்ப்பணிக்கும் பௌத்த மத நிகழ்வொன்று 2026 ஒக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களிலும் திகம்பத்தனை கடற்படைப் பிரிவில்,இலங்கை கடற்படைக் கப்பலான திஸ்ஸ நிறுவனத்தின் கட்டளை அதிகாரி, கெப்டன் துஷார ஜயவர்தன மேற்பார்வையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
இதற்கமைய, தாய்நாட்டின் ஒற்றுமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களின் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் வகையில், 2026 ஒக்டோபர் 15 ஆம் திகதி மாகல்லேன ரஜமஹா விகாரையின் பல்லேகம குணரதன தேரர் வருகை தந்து தர்ம உபதேச நிகழ்வொன்றை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, 2026 ஒக்டோபர் 16 ஆம் திகதி தான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வாறு உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களுக்குப் புண்ணியத்தை அர்ப்பணிக்கும் சமய நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை கடற்படைக் கப்பலான திஸ்ஸ நிறுவனத்தையும் கிழக்கு கடற்படை கட்டளையகத்தையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட, கனிஷ்ட கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.













