EVENT NEWS › 2026

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப குறுகியகாலப் பயிற்சி நெறியை நிறைவு செய்த 15 கடற்படைப் வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

09 Oct 2026

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பக் குறுகியகாலப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 15 கடற்படைப் வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (2026 ஒக்டோபர் 09) நாவல பகுதியில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுனில் த சில்வா அவர்களின் தலைமையில், அப்பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடற்படை மருத்துவ உதவியாளர் வீரர்களின் தொழில்சார் அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இப்பயிற்சி நெறியின் மூலம், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் தொடர்பான அறிவையும் திறன்களையும் விருத்தி செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் கடற்படையின் சுகாதார சேவையின் செயல்திறனை மேலும் மேம்படுத்த முடியும் என இலங்கை கடற்படை எதிர்பார்க்கிறது.

மேலும், இந்நிகழ்வில் கடற்படை மருத்துவ சேவைகள் (நோய்த்தடுப்பு மற்றும் புனர்வாழ்வு) பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் கெப்டன் தினேஷ் ஆரியதேவ மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வகப் பிரிவின் பிரதானியான கலாநிதி துலாரி விஜேரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Accessibility Tools