EVENT NEWS › 2026

‘சயுருசர’ சஞ்சிகையின் 50 ஆவது இதழுக்குப் படைப்புகளைச் சமர்ப்பித்த வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன

16 Oct 2026

இலங்கை கடற்படையின் ஊடகப் பணிப்பாளர் அலுவலகத்தினால் வெளியிடப்படும் ‘சயுருசர’ சஞ்சிகையின் 50ஆவது இதழுக்காக படைப்பாக்கக் கவிதைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து வெற்றிபெற்ற கடற்படைப் வீரர்கள் மற்றும் கடற்படைக் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட படைப்புகளைச் சமர்ப்பித்த வெற்றியாளர்களின் திறமைகளைப் பாராட்டி, அவர்களுக்கு நிதிப் பரிசுகளை வழங்கும் நிகழ்வு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களினால் இன்று (2026 ஒக்டோபர் 16) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன்படி, ‘சயுருசர’ சஞ்சிகையின் 50 ஆவது இதழுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளில் சிறந்த கவிதைப் படைப்புக்கான பரிசை ஏபல் சீமன் எச்எம்கேஎம் பண்டாரவும், சிறந்த ஓவியத்திற்கான பரிசை கொமாண்டர் (மரைன்) நிஷாந்த பிரசாத்தின் மகளான துலினி சனன்யா உடுகமசூரியவும், சிறந்த புகைப்படத்திற்கான பரிசை லெப்டினன்ட் கொமாண்டர் (சுழியோடல்) யோமால் வீரசிங்கவும் கடற்படைத் தளபதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

மேலும், கடற்படையினரின் படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், கடற்படை ஊடகப் பிரிவினால் ‘சயுருசர’ சஞ்சிகை 2007ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகின்றது.

Accessibility Tools