கடற்படைத் தளபதி திருகோணமலை கடற்படை கப்பல்தளத்தின் ‘கொமாண்டர் சாந்தி பஹார் நினைவு படகோட்டக் கழகத்தின்’ கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்றார்
திருகோணமலை கடற்படை கப்பல்தளத்தில் அமைந்துள்ள ‘கொமாண்டர் சாந்தி பஹார் நினைவு படகோட்டக் கழகத்தை’ பார்வையிடுவதற்காக இன்று (2026 ஒக்டோபர் 31) விஜயம் செய்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, குறித்த விளையாட்டுக் கழகத்தினால் முன்னெடுக்கப்படும் பாய்மரப் படகோட்டப் பயிற்சி நடவடிக்கைகளை மேலும் உயர்ந்த தரத்தில் முன்னெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கீழ் இயங்கும் ‘கொமாண்டர் சாந்தி பஹார் நினைவு படகோட்டக் கழகத்தினால்’, இலங்கை பாய்மரப் படகோட்டச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் வருடாந்தம் சர்வதேச பாய்மரப் படகோட்டப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் அப்பிரதேசத்தில் நீர் விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்கும் இக்கழகம் விசேட பங்களிப்பை வழங்கி வருகின்றது.
இக்கழகத்தின் ஊடாக கடற்படை வீரர்களுக்கு பாய்மரப் படகோட்டப் பயிற்சி வசதிகள் வழங்கப்படுவதுடன், அப்பயிற்சி வசதிகளை அப்பிரதேச பாடசாலை மாணவர்களும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினையும் கடற்படை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அதன்படி, இந்தக் கண்காணிப்பு விஜயத்தின்போது, குறித்த பாய்மரப் படகோட்டக் கழகத்தில் பயிற்சிக்காக வருகை தந்திருந்த கடற்படை வீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை ஊக்குவித்த கடற்படைத் தளபதி, அக்கழகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் பயிற்சி நடவடிக்கைகளை மேலும் உயர்ந்த தரத்தில் முன்னெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.













