EVENT NEWS › 2026

‘BIMSTEC – 2026’ பயிற்சிக்காக நாட்டிலிருந்து புறப்பட்ட கஜபாகு கப்பல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சென்றடைந்தது

31 Oct 2026

இந்தியக் கடற்படையினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘BIMSTEC – 2026’ கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து புறப்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகு, 2026 ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலுள்ள ஸ்ரீ விஜயபுரம் நகரின் Port Blair துறைமுகத்தைச் சென்றடைந்தது. இதன்போது, இந்தியக் கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைவாக கஜபாகு கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

2026 ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சியானது, 2026 நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை துறைமுகம் மற்றும் கடல் சார் கட்டங்கள் என இரண்டு (02) கட்டங்களின் கீழ் நடைபெறவுள்ளது. இதற்காக, BIMSTEC உறுப்பு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கரையோரக் காவல் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போர்க்கப்பல்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன.

அதன்படி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான தலைமைத் தளபதி (Commander-in-Chief, Andaman and Nicobar Command – CINCAN) வைஸ் அட்மிரல் Vineet McCarty தலைமையில் நடைபெற்ற ‘BIMSTEC – 2026’ கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியின் ஆரம்ப நாளில், அப்பயிற்சியின் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பயிற்சியின் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பாக அதில் பங்கேற்கும் தரப்பினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகு கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் அசோக வீரசேகர, இப்பயிற்சியின் ஆரம்ப நாளை முன்னிட்டு நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்புகளிலும் கலந்துகொண்டார்.

Accessibility Tools