EVENT NEWS › 2026

இலங்கை கடற்படைக் கப்பலான ‘திஸ்ஸ’ நிறுவனம் தனது 69 ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

15 Oct 2026

கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான ‘திஸ்ஸ’ நிறுவனத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா, 2026 ஒக்டோபர் 15 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

அதன்படி, 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை மரபுகளுக்கு அமைய, கடற்படைப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு, குறித்த நிறுவனத்தின் கட்டளை அதிகாரியான கெப்டன் துஷார ஜயவர்தனவினால் அன்றைய தினம் காலை திஸ்ஸ நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய ஆண்டு நிறைவு விருந்துபசாரம் பொது உணவகத்தில் நடைபெற்றது.

மேலும், 1957ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நிறுவப்பட்ட திஸ்ஸ நிறுவனத்தின் 69ஆவது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, உயிர்நீத்த கடற்படைப் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில், பௌத்த சமய மரபுகளுக்கு அமைவாக போதி பூஜை நிகழ்வொன்று 2026 ஒக்டோபர் 25ஆம் திகதி திஸ்ஸ விகாரையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Accessibility Tools