இலங்கை கடற்படைக் கப்பல் நிபுண நிறுவனத்தில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்முறை குறித்த கண்காட்சியொன்று நடைபெற்றது
இலங்கை கடற்படைக் கப்பல் நிபுண நிறுவனத்தில் நீருக்கடியிலான போர்முறைப் பாடசாலை மூலம் ‘The Abyss’ எனும் கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்முறை பற்றிய கண்காட்சியும், நீர்மூழ்கிக் கப்பலின் மாதிரியொன்றைக் காட்சிப்படுத்தலும் 2026 செப்டம்பர் 18 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறுவதுடன், அதன் ஆரம்ப நிகழ்வு தெற்கு கடற்படைக்கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேரா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அதன்படி, இலங்கை கடற்படைக் கப்பல் நிபுண நிறுவனத்தில் கட்டளை அதிகாரி கெப்டன் ரசிக பியசேனவின் மேற்பார்வையில், நீருக்கடியிலான போர்முறை ஆயுதப் பயிற்சி (UC/UW) மூன்றாம் கட்டத்தைப் பயிலும் கடற்படை வீரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் மூலம்; நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்முறை, ஆயுத மற்றும் உணரி அமைப்புகள், நீருக்கடியிலான ஒலிகளைக் கண்டறிதல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகள் தொடர்பான கடற்படை வீரர்களின் அறிவையும் நடைமுறைத் திறன்களையும் மேம்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இக்கண்காட்சியுடன் இணைந்ததாக நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்முறைப் பாடசாலையில் நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த தரவு சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு தொகுதி (Integrated Data Collection and Tracking - IDCT) அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன், நீருக்கடியிலான எதிரொலிகளைக் கண்டறியும் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் இத்தொகுதியானது, இலங்கை கடற்படையில் நிறுவப்பட்டுள்ள ஒரே ஒரு தொகுதியாகும்.













